
admin
Jun 12, 2026
விளையாட்டு
FIFA உலகக்கிண்ணம் 2026: தென் கொரியா திரில் வெற்றி!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு 'ஏ' க்கான இரண்டாவது லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இப்போட்டியானது மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் (Guadalajara Stadium) நடைபெற்றது.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், இரு அணிகளின் பலத்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முதல் பாதியில் எவராலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என கோல் ஏதுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்தது. ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் Ladislav Krejčí ஒரு அபாரமான கோலை அடித்துத் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.
ஒரு கோல் பின்னடைவில் இருந்த தென் கொரிய அணி, அதன் பின்னர் ஆட்டத்தை முழுமையாகத் தன்வசப்படுத்தியது. அதற்கமைய, போட்டியின் 67ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் Hwang In-beom கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய Oh Hyeon-gyu மீண்டும் ஒரு துல்லியமான கோலை அடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





