
Rebecca
Jan 19, 2026
விளையாட்டு
இலங்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி விஜயம்

28 பேர் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இன்று காலை 08:20 மணிக்கு டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
இந்தச் சுற்றுப்பயணத்தில் 03 ஒருநாள் போட்டிகளும் (ODI) மற்றும் 03 இருபதுக்கு-20 (T20) போட்டிகளும் நடைபெறவுள்ளன.
ஒருநாள் போட்டித் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், 1வது போட்டி ஜனவரி 22ஆம் திகதி பகல்-இரவு ஆட்டமாகவும், 2வது போட்டி ஜனவரி 24ஆம் திகதி பகல்-இரவு ஆட்டமாகவும், 3வது போட்டி ஜனவரி 27ஆம் திகதி பகல்-இரவு ஆட்டமாகவும் இடம்பெறவுள்ளன.
இருபதுக்கு-20 போட்டித் தொடர் பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஜனவரி 30, பெப்ரவரி 01 மற்றும் பெப்ரவரி 03 ஆகிய திகதிகளில் இரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் இணைந்து விசேட வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
போட்டி அட்டவணை மற்றும் டிக்கெட் விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






