Search

admin

Apr 16, 2026

விளையாட்டு

சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு அவமதிப்பு

பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியின் போது, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறி, சென்னை அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.


மைதானத்தில் கடமையில் இருந்த DJ, சென்னை அணி வீரர்களைக் கேலி செய்யும் விதமான பாடல்களை ஒலிரப்பச் செய்ததே இந்த சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.

போட்டியின் போது சென்னை அணி வீரர்களையும் ரசிகர்களையும் சீண்டும் வகையில் பாடல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

RCB வீரர் ஜித்தேஷ் சர்மா கிண்டலாகப் பாடிய "இட்லி, தோசை, சட்னி, சாம்பார்" என்ற பாடலை, மைதான DJ அடிக்கடி ஒலிக்கச் செய்துள்ளதாக சென்னை அணி தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் சென்னை அணி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இது குறித்து பிசிசிஐ உரிய விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All