Search

admin

Apr 15, 2026

விளையாட்டு

கொல்கத்தா அணி தலைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

2026 ஐபிஎல் தொடரின் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்றது.

193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இந்தநிலையில் மெதுவாக பந்து வீசியதற்காக கொல்கத்தா அணி தலைவர் ரகானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். நடத்தை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த அபராதமானது, இந்த தொடரில் கொல்கத்தா அணியின் முதல் விதிமீறலாக அமைந்ததால், இந்த அபராதமானது தலைவருக்கு மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All