Search

admin

Jun 17, 2026

விளையாட்டு

ஹெட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டீனாவிற்கு அபார வெற்றி!

2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'ஜே' (Group J) லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது.


இந்த போட்டியில் அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து அசத்தலான சாதனையைப் படைத்துள்ளார்.


கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் தொடக்கம் முதலே அர்ஜென்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.


இதனைத் தொடர்ந்து, அல்ஜீரிய அணியினர் பதிலடி கொடுக்க முயன்றபோதிலும், அர்ஜென்டீனாவின் பலமான தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் முழு வீச்சில் விளையாடிய மெஸ்ஸி, 60-வது மற்றும் 76-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து தனது ஹெட்ரிக் சாதனையைப் பதிவு செய்தார்.


முடிவில், அர்ஜென்டீனா 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸியின் இந்த அதிரடி ஆட்டம் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All