Search

janani

Mar 21, 2026

உள்ளூர்

அமெரிக்காவின் தற்காலிக முடிவு

அமெரிக்க - இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு 30 நாள் தடையில்லா விலக்கினை ட்ரம்ப் நிர்வாகம் நேற்று வழங்கியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்கா இவ்வாறு தடைகளைத் தற்காலிகமாக நீக்குவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்த நிலையில், மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் பொதுவான உரிமத்தை நேற்று வெளியிட்டது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All