2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பல வருடங்களின் பின் இன்று வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு

உள்ளூர்May 31, 2026 · 3 months முன்1
பல வருடங்களின் பின் இன்று வானில் இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு

பல வருடங்களுக்குப் பின்னர் வானில் தோன்றும் ‘நீல நிலவு’ என அழைக்கப்படும் அரிய வகை முழு நிலவை இன்று ( 31) இரவு பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர விடுத்துள்ள அறிவிப்பில், இந்த விசேட நிகழ்வானது பொதுவாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறையோ நிகழக்கூடிய ஒரு அரிய வானியல் நிகழ்வு என விவரித்துள்ளார்.

எனினும், ‘நீல நிலவு’ என்பது சந்திரன் நீல நிறமாக மாறுவதைக் குறிக்காது என்றும், ஒரே நாட்காட்டி மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவே இவ்வாறு ‘நீல நிலவு’ என அழைக்கப்படுவதாகவும் விஞ்ஞான பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு வானம் மேகமூட்டமின்றித் தெளிவாகக் காணப்படும் பட்சத்தில், நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இந்த அரிய வானியல் நிகழ்வை பொதுமக்கள் தெளிவாகப் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.