2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

உள்ளூர்March 24, 2026 · 5 months முன்2
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும், இன்று முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, தேவையற்ற வகையில் பொதுமக்கள் எவரும் தலைமை மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் வருகைத்தர வேண்டாம் என ஆட்பதிவுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.