2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

சர்வதேச சட்டத்தை எதிர்க்க அரசின் அச்சம் : எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி

உள்ளூர்March 20, 2026 · 5 months முன்2
சர்வதேச சட்டத்தை எதிர்க்க அரசின் அச்சம் : எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி

சர்வதேச சட்டங்களை மீறி முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை ஏன் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலில் இலங்கை நடுநிலை வகிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் உரையாற்றிய போதே இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

சர்வதேச சட்டங்களைப் பாதுகாப்பதற்கான முறையான நெறிமுறைச் செயல்முறைகளை (Protocol) அரசாங்கம் பின்பற்றத் தவறியுள்ளமை கண்டனத்திற்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.

“சர்வதேச சட்டமீறல்களைக் கண்டிப்பதற்கு நாம் அஞ்சக்கூடாது” என அவர் இதன்போது வலியுறுத்தினார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் ஏனைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், பல்வேறு ஆக்கப்பூர்வமான யோசனைகளை அவர் அரசாங்கத்திடம் முன்வைத்தார்.

தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.”மக்களின் நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் சகல ஆக்கப்பூர்வமான தீர்மானங்களுக்கும் எதிர்க்கட்சியாக நாம் எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்” என அவர் உறுதியளித்தார்.

எனினும், சர்வதேச விவகாரங்களில் தார்மீகப் பொறுப்புடன் அரசாங்கம் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் மீளவும் வலியுறுத்தினார்.