2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

செம்மணியை நோக்கி ஜனாதிபதி

உள்ளூர்September 1, 2025 · 12 months முன்2
செம்மணியை நோக்கி ஜனாதிபதி

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி -சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக, “யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார, செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியையும் பார்வையிடலாம்” என்று அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இது தொடர்பில் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ். நிரஞ்சனிடம் கேட்டபோது, “அவ்வாறான தகவல் எதுவும் இதுவரை (நேற்று வரை) நீதிமன்றத்துக்கு அறிவிக்ப்படவில்லை” என்று கூறினார்.

இந்தநிலையில், இன்றும் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.