2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய 9,000 பேருக்கு அபராதம்

உள்ளூர்February 22, 2026 · 6 months முன்2
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய 9,000 பேருக்கு அபராதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இருக்கை பட்டிகளை (Seatbelts) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள சட்டத்தை மீறிய சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகள் அபராதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் அனைத்து இடங்களிலும் சாரதிகள் மற்றும் பயணிகள் இருக்கை பட்டைகளை அணிந்துள்ளார்களா என்பது குறித்து பொலிஸார் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 செப்டம்பர் 01 முதல், சாரதிகள் மற்றும் முன் மற்றும் பின் ஆசனங்களில் அமர்ந்திருக்கும் அனைத்து பயணிகளுக்கும் இருக்கை பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதையும், விபத்துக்களின் போது ஏற்படும் காயங்கள் அல்லது உயிரிழப்புகளைக் குறைப்பதையுமே இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அபராதத்தைத் தவிர்ப்பதை விட, தங்களின் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்தச் சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.