2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

திருகோணமலை விகாரை: ரீட் மனுவை மீள அழைக்க உத்தரவு

உள்ளூர்February 20, 2026 · 6 months முன்1
திருகோணமலை விகாரை: ரீட் மனுவை மீள அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, அதன் விகாராதிபதி தாக்கல் செய்த ரீட் மனுவை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அதன்படி, தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு அழைக்கப்பட்டது. 

இதன்போது, இந்த மனுவைச் சமரசமாகத் தீர்ப்பது குறித்த விடயங்களைப் பரிசீலிப்பதற்காக ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.