2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

உள்ளூர்February 18, 2026 · 8 months முன்3
யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது.

எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை எனும் பெயரில் , பாலியல் அத்துமீறல்கள் , துஸ்பிரயோகங்கள் , சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள் , விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால் , பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும் , பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது