2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்டம்.

உள்ளூர்August 31, 2025 · 12 months முன்0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி லண்டனில்  ஆர்ப்பாட்டம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரியும் செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டியும்நேற்று – வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை உயர்ஸ்தானிகரகத்திருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம் பெயர் தமிழ் உறவுகள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படுகொலை செய்யப்பட்டு செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட
டோருக்கும் வலிந்து காணாமல் லாக்கப் பட்டோருக்கும் நீதி கோரியும் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை உணர்வுபூர்வமாக முன்வைத்தனர்.