2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

களஞ்சியசாலைகள் இன்மையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பியிடம் முறையீடு

உள்ளூர்February 13, 2026 · 6 months முன்4
களஞ்சியசாலைகள் இன்மையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பியிடம் முறையீடு

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவுச் செயற்பாடுகளை நேரடியாகப்பார்வையிட்டு நிலமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு விவசாயியிடமிருந்து 14 வீத ஈரப்பதன் உடைய 2500கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாக இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு முறிப்பிலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்களஞ்சியசாலையில் மாத்திரமே நெல்லை கொள்வனவுசெய்து சேகரித்து வைப்பதற்கான இடவசதிகள் இருப்பதாகவும், ஏனைய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் இன்மையால் நெற்கொள்வனவை மேற்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறாக நிலைமைகளைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டசெயலாளரைச் சந்தித்து நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவிற்கான களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.