2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

SIM பதிவு செயன்முறையில் மாற்றம்

உள்ளூர்February 10, 2026 · 6 months முன்2
SIM பதிவு செயன்முறையில் மாற்றம்

உள்நாட்டு சிம் அட்டை பதிவு செயன்முறைகளை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் 2019-08-02க்கு முன்னர் பெற்றுக்கொண்ட சிம் அட்டைகளுக்கான தகவல்களை மீள பதிவு செய்வதற்கு அமைச்சரவை இணங்கியுள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சிட் அட்டைகளுக்கான குறிப்பிட்ட தகவல்கள் உரிய தொலைபேசி செயற்பாட்டு நிறுவனங்களிடம் இல்லையெனவும் இதனால் சட்ட ரீதியான விசாரணைகளுக்கு சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 16 – 17 வயதிற்கிடைப்பட்டவர்களை பதிவு செய்வதற்கும் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகளை விநியோகிப்பது குறித்தான ஒழுங்குமுறைகளை உள்ளடக்கி தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறைகளை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.