2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

தங்கக் கலசங்களைத் திருடிய இருவர் கைது

உள்ளூர்February 8, 2026 · 6 months முன்1

புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய குற்றச்சாட்டில், இரண்டு சந்தேகநபர்கள் இன்று நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களையே இவ்விரு சந்தேகநபர்களும் திருடியுள்ளனர்.

அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற இவர்கள், நாவலப்பிட்டி – கெட்டபுலாவ விகாரையில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடியுள்ளனர். இக்காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி  கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணைகளிலேயே நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.