2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தென்கொரிய பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை.

உலகம்August 28, 2025 · 12 months முன்2
தென்கொரிய பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை.

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இங் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை செய்யும் மசோதாவை நேற்று (27) பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.

இம் மசோதாவுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்ததையடுத்து, தென்கொரியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா பாடசாலை மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.

இப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.