2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

உள்ளூர்January 31, 2026 · 7 months முன்1
கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம்

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான மேல் மற்றும் கீழ் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சமிக்ஞை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகள் காரணமாக இந்தத் தாமதம் ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தப் பணிகள் காரணமாக, இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாகக்கூடும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.