2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

உள்ளூர்January 30, 2026 · 7 months முன்2
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது, ‘சதொச’ நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்பு: – நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை தடைசெய்துள்ளது.