2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

ஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

உள்ளூர்January 30, 2026 · 7 months முன்2
ஐந்தாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.

அதற்கு அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் அன்று மாலையே அதனை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகத் தீவிரப்படுத்தினர்.

இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில் ஒரு பெண்ணும் மற்றும் ஒருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மீதமிருந்த இருவரும் தொடர்ந்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து இன்று காலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.