2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கை – இங்கிலாந்து T- 20 தொடர் இன்று ஆரம்பம்

விளையாட்டுJanuary 30, 2026 · 7 months முன்0
இலங்கை – இங்கிலாந்து T- 20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. இந்த முதலாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்தத் தொடரில் 3 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

முதலாவது போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று இரவு பல்லேகல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்தது. 

இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்குபற்றும் கடைசி இருபதுக்கு-20 தொடர் இதுவாகும். 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இதுவரை 14 இருபதுக்கு-20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 10 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இலங்கை அணியானது 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக இருபதுக்கு-20 தொடரை ஒன்றை கைப்பற்றவில்லை. 

அதேபோன்று, இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக ஒரு இருபதுக்கு-20 போட்டியில் வெற்றியீட்டியதும் 2014 ஆம் ஆண்டிலேயாகும். 

இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற கடந்த 8 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. 

இவ்வாறான தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் இலங்கை அணி இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.