2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதை கும்பல்

உள்ளூர்January 27, 2026 · 7 months முன்1

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட் மற்றும் சாரவிட ஆகியவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுவதாகக் குறிப்பிட்டார். 

இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இது தொடர்பில் இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அத்துடன், போதைப்பொருள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், இது குறித்து எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் எச்சரித்தார்.

இதன்படி, கொக்கெய்ன், ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை 5 கிராமுக்கு மேல் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

தமது நெருங்கியவர்கள் இந்த போதைப்பொருள் அபாயத்திற்கு பலியாவதற்கு முன்னர், தமது பிரதேசங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது குறித்து தகவல் வழங்குவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தினார்.