2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

உள்ளூர்January 25, 2026 · 7 months முன்2
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. 

நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெப்பமான காலநிலையும், மாலை வேளையில் பனிமூட்டமும் நிலவி வருகின்றது. 

இவ்வாறு நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். 

இவ்வாறான குளு குளு காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை முதல் நுவரெலியாவிற்கு பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 

அதுவும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. 

விக்டோரியா தாவரவியல் பூங்காவிலும், பழமையான பிரதான தபால் அலுவலகம் பகுதியிலும் நுவரெலியா – பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள கிரகரி வாவி பகுதிகளிலும் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சூழ்ந்துள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது.