2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விரைவில் நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை!

உள்ளூர்August 27, 2025 · 12 months முன்0
விரைவில் நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவித்தல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு நேற்றையதினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந் நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் இலங்கையின் அரசியல் பரப்பில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலையில் இருந்து அவர் வெளியேறி, அவரது உடல் நிலை சீரானதும் நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு கடந்த சில நாட்களாக ஆதரவாக இருந்த பொதுமக்களுக்கு ரணில் தரப்பில் இருந்து நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது