2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!

போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

உள்ளூர்August 27, 2025 · 1 year முன்0
போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (26) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு சோ.ரங்கநாதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. இவ் கூட்டத்தில் இராசமாணிக்கம் சாணக்கியன் ,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த பிரதேசமாக பழுகாமம் ஆற்றின் நடுவில் உள்ள கொக்குபீச்சி மற்றும் மண்டூர் – குறுமண்வெளி படகுச் சேவையினை அண்டிய பிரதேசங்களை மாற்றுவதற்கான திட்டங்களை காணிப்பயன்பாட்டுக் குழுவில் இணைத்து சிபார்சு பெறப்படுவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. இந்த திட்டத்தினை போரதீவுப்பற்று பிரதேச சபை முன்னெடுக்கும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

சுரவணையடியூற்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கான புதிய கட்டடம் ஒன்றினை அமைப்பதற்கான சிபார்சும் இக்கூட்டத்தில் பெறப்பட்டது.

பின்னர் யானை வேலி அமைத்தல், குடிநீர்ப் பிரச்சினை, காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என மக்களின் பல பிரச்சினைகள் இவ் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.