2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்1
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த சம்பளத்தை வழங்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 1,550- வரை அதிகரித்தல் மற்றும் வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக அவர்களுக்கு ரூபா 200- வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த முன்மொழிவை அமுல்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபா நிதி 2026 ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ஏற்புடைய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக செலுத்துவதற்கும், அதன் பின்னர், தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து மேற்குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை நேரடியாக தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த முறைமையை பின்பற்றி குறித்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.