2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பஸ்கள் வரும் நேரத்தை அறிய புதிய செயலி

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்0
பஸ்கள் வரும் நேரத்தை அறிய புதிய செயலி

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய கையடக்க தொலைபேசி செயலியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு மாத்தறை பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தகே தலைமையில் இடம்பெற்றது.

தென் மாகாணத்தில் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தமக்குரிய பஸ் தரிப்பிடங்களுக்கு பஸ்கள் வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் இந்த எஸ்.பீ.பஸ் கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கென குறித்த பஸ்களில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. பஸ்கள் தரித்து நிற்கும் நிலையங்கள்இ பஸ்கள் புறப்படுமா இல்லையா என்பது குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.