2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

ஹமாஸ் அமைப்பினர் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும்

உலகம்January 17, 2026 · 7 months முன்3
ஹமாஸ் அமைப்பினர் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும்

ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தை தனது உத்தியோகப் பூர்வ சமூக வலைதளத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்காவின் முயற்சியால் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்ப மாகியுள்ளது. இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பு தனது வசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் எனவும் பிணைக் கைதிகளின் உடல்களை உடன டியாகத் திரும்பத் தர வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவர்கள் இதை மரியாதையான முறையில் செய்யலாம் என தெரிவித்த அவர் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் ஹமாஸின் சுரங்கப்பாதைகளைத் தகர்க்கவும் கனரக ஆயுதங்களை அப்புறப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், காசாவின் சிவில் நிர்வாகத்தைக் கவனிக்க அமைதி வாரியம் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவிற்கு அந்நாட்டின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.