2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

புலதிசி ரயில் சேவை மீளவும் வழமைக்கு!

உள்ளூர்January 10, 2026 · 7 months முன்0
புலதிசி ரயில் சேவை மீளவும் வழமைக்கு!

அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலதிசி கடுகதி ரயில் சேவை நேற்றிலிருந்து (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாரஇறுதியில் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது நேற்று (09) நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது.

மட்டக்களப்பில் இருந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (11) நண்பகல் கொழும்புக்கான கடுகதி சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் டிட்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்காலத்தில் பொதுமக்கள், மாணவர்களின் நலன் கருதி இந்த சேவையானது மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.