2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பதுளை ஸ்பிரிங்வெலி பாலம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

உள்ளூர்December 29, 2025 · 8 months முன்0
பதுளை ஸ்பிரிங்வெலி பாலம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியின் பாலத்திற்குப் பதிலாக தற்காலிகமாக அமைக்கப்படும் பெய்லி பாலம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இந்த வீதியானது இப்பகுதி மக்களின் அன்றாடத் தேவைகளுக்கும் , தோட்டத்துறையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியமான ஒரு பாதையாகும்.

கடந்த வாரம் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இந்தப் பாலம் பலத்த சேதமடைந்து முற்றாக அழிவடைந்திருந்தது. இதனால் அப்பகுதிக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்தன. இந்நிலையில், (27) அன்று பெய்லி பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள பணிகளை மிக விரைவாக நிறைவு செய்து, மக்களின் பாவனைக்காகவும் வாகனப் போக்குவரத்திற்காகவும் பாலத்தைத் திறந்துவிட வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.