2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுங்க அதிகாரிகளால் இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது

உள்ளூர்December 29, 2025 · 8 months முன்0
சுங்க அதிகாரிகளால் இரண்டு வெளிநாட்டு பயணிகள் கைது

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 23 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மென்செஸ்டர்’ மற்றும் ‘பிளாட்டினம்’ வகையைச் சேர்ந்த 84,000 சிகரெட்டுகள் அடங்கிய 420 கார்ட்டூன்களும், 25 நவீன ரக ‘அப்பிள்’ கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.