2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!

ஹிக்கடுவை கடலில் உயிருடன் மீட்கப்பட்ட உக்ரைன் தாய் மற்றும் மகன்

உள்ளூர்December 28, 2025 · 8 months முன்0

ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று முன்தினம் நீராடிக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு பெண் மற்றும் அவரது மகன், கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஹிக்கடுவை பொலிஸின் உயிர்காப்புப் பிரிவினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மதிய நேரத்தில் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த உயிர்காப்பு அதிகாரிகள்,
சப் இன்ஸ்பெக்டர் சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் (87162) திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (96221) துமிந்த ஆகியோரே இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், 42 வயதுடைய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவருடைய 14 வயதுடைய மகனும் கடல் அனர்த்தத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.