2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்2
கிளிநொச்சியில் புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி பளை போலீஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று பரிதாபகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. காங்கேசன்ந்துயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன், முகமாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதுண்டு உயிரிழந்தார்.

இவ்விபத்து நேரத்தின் போது, ரயில் வீதி காவலாளர் அப்பகுதியில் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மக்கள் கூறும் தகவலின் படி, குறித்த பகுதியில் இதுபோன்று சம்பவங்கள் இரண்டு முறை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இறந்தவர் இரத்தினராசா கிருஷ்ணமோகன், ஆணைப்பந்தி நல்லூர், யாழ்ப்பாணம், வயது 52, குடும்பஸ்தர். சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.