2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்2
கண்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விடுக்கப்பட்டிருந்த வெளியேறல் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) இன்னும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர மற்றும் மினிபே பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டஹின்ன, மத்துரட்ட, ஹங்குரன்கெத மற்றும் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மூன்றாவது கட்ட வெளியேற்றல் சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

மேலும், பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஹசாலி ஹேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை இல்லாத வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவு மழை பெய்யக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடமேல் மாகாணம், அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.