2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

சிங்கப்பூர் மற்றும் மலேசிய தேரர்கள் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு

உள்ளூர்December 5, 2025 · 8 months முன்2
சிங்கப்பூர் மற்றும் மலேசிய தேரர்கள் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி வண. கே. குணரத்ன தேரர் தலைமையிலான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த குழு, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவை சந்தித்தது.

Clean Sri Lanka செயலகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், ​​சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க, இந்தக் குழு ஜனாதிபதியின் செயலாளரிடம் உறுதியளித்தது.

அண்மைய வரலாற்றில் இலங்கை முகங்கொடுத்த மிக மோசமான அனர்த்தமான டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கும் வெளிநாட்டு சங்கங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவைப் பெற தமது சங்கம் உள்ளிட்ட குழு, சுய விருப்பத்துடன் முன்வந்தாக கலாநிதி வண. கே. குணரத்ன தேரர் இங்கு தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருள் உதவிகளை துரிதப்படுத்தவும், அரசாங்கம் செயல்படுத்தும் Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்திற்கு ஒரு முறையான திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கவும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய 2 கொள்கலன்கள், அடுத்த சில நாட்களில் இந்நாட்டுக்கு வந்து சேரும் என்றும் தூதுக்குழு மேலும் தெரிவித்தது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் முறையான வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க முறையான நகர திட்டத்தின் மூலம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல் தொடர்பான முதற்கட்ட இணக்கத்தை இரு தரப்பினரும் எட்டினர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் செயலாளர் டயனா லீ (னுயையெ டுநந), சிங்கப்பூர் சிங்கள பௌத்த சங்கத்தின் செயலாளர் ரஞ்சனி சில்வா, Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத் உட்பட தூதுக் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.