2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைப்பு

உள்ளூர்December 5, 2025 · 8 months முன்2
சூறாவளியால் தடைப்பட்ட மின் இணைப்புகளில் 85 சதவீதம் சீரமைப்பு

அவசர அனர்த்த நிலைமை காரணமாக மின்சாரம் தடைப்பட்ட சுமார் 39 இலட்சம் நுகர்வோரில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் சீர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நொயெல் பிரியந்த தெரிவித்தார்.

அனர்த்த செயற்பாட்டு ஊடக மையத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சுமார் 70 இலட்சம் மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 39 இலட்சம் பேர் மின்சார இணைப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்களில் சுமார் 85% சதவீதமானோரின் மின் இணைப்புகள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

அவசர நிலைமையில் 16,771 மின்மாற்றிகள் செயல்படாமல் இருந்ததாகவும், அவற்றில் 14,549 மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தடைப்பட்ட எஞ்சிய மின் இணைப்புகள் விரைவில் மீளமைக்கப்படும் என்றும், இந்தச் செயல்பாட்டில் ஒரு மின் ஊழியர் உயிரிழந்ததாகவும், அது குறித்து அனுதாபம் தெரிவிப்பதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.