2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

உள்ளூர்December 4, 2025 · 9 months முன்0
மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும் திறப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் நீரின் அளவு குறைந்து வீதிகள் மீள் புனரமைக்கப்பட்டுள்ளமையால், குமன தேசியப் பூங்கா, ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா, மற்றும் யால தேசியப் பூங்காவின் ஏ பிரிவு ஆகியன இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகின்றன என வனஜீவராசிகள் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மை) பணிப்பாளர் மஞ்சுள அமரரத்ன தெரிவித்துள்ளார்.

மரங்கள் முறிந்து விழும் ஆபத்துக்கள் இருப்பதால் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவெல மிருகக்காட்சி சாலை ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

பின்னவெல யானைகள் சரணாலயம், ரிதியகம சஃபாரி பூங்கா ஆகியன திங்கட்கிழமை முதல் மீண்டும் பொதுமக்களின் பார்வையிடலுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிச் சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து பூங்காக்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.