2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

உள்ளூர்November 30, 2025 · 9 months முன்2
11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஊவ பரணகம, ஹப்புத்தளை, பண்டாரவளை, ஹாலிஎல, பதுளை, லுணுகல, பசறை, மீகஹகிவுல, சொரணத்தோட்டை, வெலிமடை, எல்ல, கந்தகெட்டிய மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்தின் பன்வில, பாததும்பர, கங்க இஹல கோரளை, உடுநுவர, தொழுவ, பூஜாபிட்டிய, மினிப்பே, கங்கவட்ட கோரளை, அக்குறணை, பஸ்பாகே கோரளை, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்துவ, பாதஹேவாஹெட்ட, உடுதும்பர, தும்பனே, உடுப்பலாத, குண்டசாலை, யட்டிநுவர, தெல்தோட்டை மற்றும் மெததும்பர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, மாவனல்லை, தெரணியகல, யட்டியாந்தோட்டை, கலிகமுவ, வரகாபொல, ருவான்வெல்ல, அரநாயக்க, கேகாலை, புளத்கொ{ஹபிட்டிய மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல, அலவ்வ, நாரம்மல, மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் ரிதிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, அம்பங்கங்க கோரள, பல்லேபொல, உக்குவளை, நாவுல, லக்கல-பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய பிரிவுகளுக்கும், மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரான்கெத்த, மதுரட்ட, நுவரெலியா, கிழக்கு கொத்மலை, மேற்கு கொத்மலை, தலவாக்கலை, நோர்வுட், அம்பகமுவ, நிள்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகியவற்றுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, குருவிட்ட, கொடகவெல, அயகம, எலபாத்த, கஹவத்தை, ஓப்பநாயக்க, கொலன்ன, நிவித்திகல, பலாங்கொடை, இம்புல்பே, பெல்மடுல்ல, கிரியெல்ல, இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை, காலி, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும், கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் 31 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.