2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியாவில் பேருந்து விபத்து

உலகம்November 24, 2025 · 9 months முன்0
இந்தியாவில் பேருந்து விபத்து

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்தனர்.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பேருந்தும் தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் இரண்டு பேருந்துகளும் முற்றிலும் சேதமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பேருந்து அஜாக்கிரதையாக இயக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த 28 பயணிகளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் , உயிரிழப்பு நிலை உயர வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.