2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு

உள்ளூர்November 23, 2025 · 9 months முன்1
மன்னாரில் இடம்பெற்ற மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு

மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி மன்னாரில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மன்னார் புகையிரத வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இன்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.