2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி

BREAKINGஉள்ளூர்November 22, 2025 · 9 months முன்2
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி வீதி

கொழும்பு – கண்டி பிரதான வீதியானது, கனேதென்ன பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டு மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் சிலர், தொடர்ந்தும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது துரிதப்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த வர்த்தக நிலையமானது, சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்துவதற்கு பிரபலமானது எனவும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.