2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

உள்ளூர்November 21, 2025 · 9 months முன்1
பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பௌசர் உதவியாளர் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து இலஞ்சம் பெற்ற தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர், முறைப்பாட்டாளர் மற்றும் அவரது நண்பர் ஒருவரிடமிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் 40,000 ரூபா பணத்தையும், வங்கிக் கணக்கு ஊடாக 10,000 ரூபா பணத்தையும் இலஞ்சமாக கோரிப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, குறித்த தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் நேற்று முற்பகல் களனி, பெத்தியாகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.