2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

SJBயின் முன்னாள் உறுப்பினர் கைது!

உள்ளூர்November 21, 2025 · 9 months முன்1
SJBயின் முன்னாள் உறுப்பினர் கைது!

தெற்கு கடற்பரப்பில் நேற்று (20) போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதில் 300 கிலோ ஹெரோயின், 02 துப்பாக்கிகள் இருந்ததாகத் பொலிஸார் தெரிவித்தனர்.