2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது!

உள்ளூர்November 20, 2025 · 9 months முன்2
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று பயணிகள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே செல்ல முயற்சித்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை தங்கள் பொதிகளில் மறைத்து வைத்துக்கொண்டு நாட்டிற்கு வந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் சாரதிகளாக பணி புரியும் நபர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்கள் பைகளில் 04 பொதிகளாக தயாரிக்கப்பட்ட 4 கிலோகிராம் 22 கிராம் குஷ் போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.