2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

சவுதியில் கோர விபத்து : 42 பேர் பலி

உலகம்November 17, 2025 · 9 months முன்2
சவுதியில் கோர விபத்து : 42 பேர் பலி

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் இறந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முஃப்ரிஹாத் அருகே அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, ​​பேருந்து மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மோதலுக்குப் பிறகு பேருந்து தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

பலியானவர்களில் குறைந்தது 11 பெண்களும், 10 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்பட்ட போதும் அந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.