2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தை உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

உள்ளூர்November 9, 2025 · 9 months முன்2
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தை உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையான இராசமாணிக்கம் இராஜபுத்திரனின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொரளையில் உள்ள தனியார் மலர்சாலைக்கு அஞ்சலிக்காக வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார குழு உறுப்பினர்களால் கட்சி கொடி அன்னாரது உடலுக்கு போர்க்கப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த 07.112025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்த அன்னாரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறைபதம் அடைந்த அன்னார் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான சி.மூ இராசமாணிக்கம் அவர்களின் புதல்வர் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம்( 09 ) பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.