2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

யாழில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு

உள்ளூர்November 7, 2025 · 9 months முன்3
யாழில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஒரே பிரசவத்தில், மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் ஒரு மாதகாலம் தீவிர சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு, கடந்த 20 வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில், இந்த வருடம் கர்ப்பம் தரித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 07ஆம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.

அதனை அடுத்து அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிறந்த மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.