2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!

ட்ரம்புக்கு கொலை மிரட்டல்.

உலகம்August 20, 2025 · 1 year முன்3
ட்ரம்புக்கு கொலை மிரட்டல்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

50 வயது நதாலி ரோஸ் ஜோன்ஸ் என்ற பெண், ஆகஸ்ட் 6ஆம் திகதியன்று தன்னுடைய பேஸ்புக் சமூக ஊடக பக்கத்தில், “ FBI அதிகாரிகளிடம் ட்ரம்ப்பை POTUS என குறிப்பிட்டு கொலை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ஆகஸ்ட் 14ஆம் திகதி அன்று மற்றொரு பதிவில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திடம் அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான விழாவை ஏற்பாடு செய்யுமாறும், அவர் பயங்கரவாதி என்றும் ரோஸ் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அமெரிக்காவின் இரகசிய சேவை நடத்திய விசாரணையில் ரோஸ் ஜோன்ஸ் தான் தெரிவித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ரோஸ் ஜோன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.