2026 August 25, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை நீடிக்க வேண்டாம் – தாயார் கோரிக்கை!“நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்அசிதவின் நெற்றியில் உரசிய ஜெய்ஸ்வாலின் தலைக்கவசம்!வட, தென் அமெரிக்காவில் தெளிவாகத் தெரியும் சந்திர கிரகணம்!குடிநீர் நெருக்கடி குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை!பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

பொன்னி சம்பா நாட்டிற்கு இறக்குமதி.

உள்ளூர்October 27, 2025 · 10 months முன்2
பொன்னி சம்பா நாட்டிற்கு இறக்குமதி.

நாட்டில் உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக, GR 11 பொன்னி சம்பா அரிசியை கடந்த 15 ஆம் திதகி முதல் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதற்கமைய உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக, 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசியின் முதல் தொகுதி கடந்த 23 ஆம் திகதி நாட்டிற்கு வந்ததாகவும் அதன் மற்றுமொரு தொகுதி கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்கம், இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் பெறுதல் தொடர்பான தேவையிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒவ்வொரு இறக்குமதியாளருக்கும் அதிகபட்சம் 520 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆண்டு அரிசி நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் டன், இதில் கீரி சம்பா வகை அரிசியின் ஆண்டு நுகர்வு சுமார் 10% (200,000 மெட்ரிக் டொன்) ஆகும்.